< Back
புதுச்சேரி
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு
புதுச்சேரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

தினத்தந்தி
|
29 Jun 2023 5:02 PM GMT

புதுவை மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி

கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளியில் கல்வி பயிலும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி மருத்துவக் கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் தற்போது ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். புதுச்சேரியில் இந்த சலுகை திட்டம் இல்லாததால் ஓரிரு மாணவர்களே மருத்துவ கல்விக்கு செல்லும் நி லை இருந்து வருகிறது. எனவே தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை கொண்டு வந்தால் ஆண்டுக்கு 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள். எனவே முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சரின் கருத்துக்களை கேட்டு விரைவில் அதற்கான அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்