< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
புதுச்சேரி

கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
29 Sept 2023 10:00 PM IST

கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி

கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கஞ்சா விற்பனை

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். அவரது மகன் முகேஷ் என்ற வாழைக்கா (வயது 20). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக ஒதியஞ்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் முகேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்