< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வெறிநாய் கடித்து 7 பேர் காயம்
|26 July 2023 10:09 PM IST
திருபுவனை பகுதியில் வெறிநாய் கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.
திருபுவனை
திருபுவனை, மதடிகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனைபாளையம் பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நாய்களுக்கு அவ்வப்போது வெறி பிடித்து சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடித்து குதறி வருகிறது.
இந்தநிலையில் நேற்று திருபுவனை பகுதியில் வெறிநாய்கள் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் திருபுவனை ஆரம்ப சுகாதார மையத்தில் நாய்கடி ஊசி போட சென்றனர். ஆனால் நாய்கடி ஊசி இல்லாததால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.