< Back
புதுச்சேரி
போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது
புதுச்சேரி

போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

தினத்தந்தி
|
17 Sept 2023 10:25 PM IST

புதுச்சேரி அருகே போதைப்பொருட்கள் வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் மாகி சப்-இன்ஸ்கெ்டர் ரெனில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மூன்டக் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அருகே ரோந்து சென்றனா. அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தலச்சேரியை சேர்ந்த முனாவர் பரோஸ் (வயது 25), வடகராவை சேர்ந்த அப்னீஸ் (32), சமீது (30), அஷ்ரப் (39), ரிஜாஸ் (34), தலச்சேரியை சேர்ந்த அனீஷ் (29) என்பதும், அவர்களிடம் இருந்து 4.9 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 900 மற்றும் 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

------

மேலும் செய்திகள்