மத்திய பணியாளர் தேர்வை 50 சதவீதம் பேர் எழுதினர்
|புதுவையில் இன்று நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை 50 சதவீதம் பேர் எழுதினர்.
புதுச்சேரி
புதுவையில் இன்று நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை 50 சதவீதம் பேர் எழுதினர்.
பாதுகாப்பு சேவை தேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் கடற்படை அகாடமி தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றாக புதுச்சேரியை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு இன்று புதுவை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 2 மணிவரை, பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை என 3 பிரிவுகளாக நடந்தது. இந்த தேர்வுக்காக 91 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் முதல் நிலை தேர்வை 44 பேரும், 2-ம் நிலை தேர்வை 44 பேரும், 3-ம் நிலை தேர்வை 19 பேரும் எழுதினர்.
கடற்படை அகாடமி தேர்வு
தேசிய பாதுகாப்பு அகாடமியின் கடற்படை அகாடமி தேர்வு காலை 10 மணிமுதல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் 4.30 மணிவரையிலும் புதுவை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த தேர்வு எழுத 82 பேர் விண்ணப்பித்த நிலையில் 43 பேர் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இது 50.28 சதவீதம் ஆகும்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் அடையாள அட்டை மட்டும் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தேர்வர்களின் வசதிக்காக புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.