< Back
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்
புதுச்சேரி

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
12 Aug 2023 9:06 PM IST

புதுச்சேரியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் புதுவை லாஸ்பேட்டை கல்பனாசாவ்லா நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அந்தோணிசாமி (வயது 62), மடுவுபேட் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த அம்பிகா (50) ஆகியோரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்றதாக மிஷ்ரா (43), அமானுல்லா (60), ராஜா (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்