புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
|கோட்டுச்சேரியில் புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திரு-பட்டினம் போலீசார் வாஞ்சூர் மெயின்ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் செந்தில் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் மலையான் தெருவில் புகையிலை பொருட்கள் விற்றதாக வடமாநிலத்தை சேர்ந்த அர்த்த பிந்து பிஸ்வால் (50), மேலவாஞ்சூர் இரும்பு தொழிற்சாலை கேண்டீனில் புகையிலை பொருட்கள் விற்ற கோவையை சேர்ந்த மோகன்ராஜ் (41) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால்-திருநள்ளாறு சாலை சந்தைத் திடல் எதிரே ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மணிகண்டன் (28), அவரது நண்பர் வடமட்டம் பகுதியை சேர்ந்த வெண்மணி (38) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.