< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
|27 July 2023 9:44 PM IST
மூலக்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் போலீசார் தர்மாபுரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கைதானவர்கள் வேணுகோபால் (வயது 64), பத்மநாபன் (51), சக்திவேல் (29), ஆனந்தன் (50) மற்றும் கோபிநாத் (48) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டு, ரூ.20,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.