சிறுவர்கள் உள்பட 5 பேர் காயம்
|மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
கோட்டுச்சேரி
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
கோட்டுச்சேரி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக திருநள்ளாறுக்கு சென்று விட்டு இளங்கோ என்பவரின் குழந்தைகள் அகிலேஷ் (11), அனன்யா (11) மற்றும் தனது தாய் தமிழரசி (52) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் நோக்கி வந்தார்.
பச்சூர் அருகில் வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமாருக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த தமிழரசி, அனன்யா, அகிலேஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து விபத்து ஏற்படுத்திய சுரக்குடி ரெயிலடி தெருவைச் சேர்ந்த மணிரத்தினம் (28) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில்காயமடைந்த அனைவரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்த புகாரின் பேரில் காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.