கஞ்சா விற்றதாக 5 பேர் கைது
|புதுவையில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுவையில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குரும்பாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாணரப்பேட்டையை சேர்ந்த நடராஜன் (வயது 42) என்பரை கைது செய்தனர். அவரிடமிருந்தது 170 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 4 பேர் கைது
மேலும் மேட்டுப்பாளையம் குண்டுசாலை சாராயக்கடை அருகே கஞ்சா விற்றதாக ஞானதியாகு நகரை சேர்ந்த அருண் (34), அய்யங்குட்டிபாளையம் கனகராஜ் (25), திலாசுப்பேட்டை மணிகண்டன் (29), லாஸ்பேட்டை அசோக் நகர் சேகர் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.