< Back
புதுச்சேரி
போதை பொருட்கள் விற்ற 5 கைது
புதுச்சேரி

போதை பொருட்கள் விற்ற 5 கைது

தினத்தந்தி
|
5 July 2023 8:57 PM IST

புதுவையில் போதை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி அருகே புகையிலை மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்யவும் தடை உள்ளது. தடையை மீறி விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதலியார்பேட்டை புதுவை- கடலூர் சாலையில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் போன்ற போதைபொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர் ஆனந்த் (வயது51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேதராப்பட்டு பகுதியில் போதை பொருட்கள் விற்றதாக கடைக்காரர் ராமகிருஷ்ணன் (30), முத்தியால்பேட்டை ஜெயமூர்த்தி (47), திருபுவனை உதயகுமார் (36), வில்லியனூர் ஆனந்தன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்