< Back
புதுச்சேரி
மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
புதுச்சேரி

மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

தினத்தந்தி
|
22 July 2023 9:43 PM IST

புதுலை மாநிலத்தில் 133 மையங்களில் நடக்கும் மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வை நேர்மையான முறையில் நடத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

புதுலை மாநிலத்தில் 133 மையங்களில் நடக்கும் மேல்நிலை எழுத்தர் தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வை நேர்மையான முறையில் நடத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தயார் நிலை

புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் 116 மேல்நிலை எழுத்தர் (யு.டி.சி.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

இதற்காக புதுச்சேரியில் 107, காரைக்காலில் 13, மாகியில் 5, ஏனாமில் 8 என 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் 3 ஆயிரம் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடையாள அட்டை

தேர்வு எழுத வருபவர்கள் ஹால்டிக்கெட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் வந்தால் அனுமதி கிடையாது.

தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, ஹால்டிக்கெட் மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்துக்கு கொண்டுவர வேண்டும். கைப்பைகள், செல்போன்கள், புளுடூத் சாதனங்கள், ஹெட்போன்கள், கால்குலேட்டர்கள், பென்டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது.

ரங்கசாமி அதிரடி

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்ககாக காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். விடைத்தாள்களை உடனடியாக திருத்தி தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை பெற சிலர் குறுக்கு வழியில் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம் நேர்மையான முறையில் தேர்வை நடத்தி தகுதியானவர்கள் பணியை பெற உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

-----

மேலும் செய்திகள்