கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
|ரெட்டியார்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
ரெட்டியார்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் பகுதியில் நேற்று காலை கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த வாலிபர்கள் 4 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்
4 பேர் கைது
அப்போது அவர்கள், அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21), கோபாலன் கடையை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19), பொறையூர்பேட்டை சேர்ந்த லோகேஷ் (19), அருண்குமார் (22) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 240 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.