புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
|புதுவையில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி பெரியகடை சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று ஆம்பூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கடையில் இருந்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தை சேர்ந்த பாலையன் (வயது 40) என்பவரை கைது செய்து அங்கு இருந்து ரூ.750 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக புதுவை விலாசா வீதியை சேர்ந்த ஜெட்மால் (51), முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (49) ஆகியோரை போலீசார் கைது செய்து ரூ.1,900 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் முத்தியால்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சண்முகசாமி (67) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.