< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
|24 Oct 2023 11:50 PM IST
புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டாின் மோட்டாா் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.
புதுச்சேரி
புதுவை உருளையன்பேட்டையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் இன்ஸ்பெக்டர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படும். இதில் ஒரு மோட்டார் சைக்கிளை கடந்த வாரம் யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் போலீஸ் பிடிபட்டனர். ராஜேஷ், மதன் மற்றும் 2 சிறுவர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் வேறு எங்கேனும் மோட்டார் சைக்கிள் திருடினார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.