விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது
|அரியாங்குப்பம் அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விபசாரம்
அரியாங்குப்பம் அருகே தவளக்குப்பம் பிள்ளையார் திட்டு வி.ஐ.பி. கார்டன் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் ஆண்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அந்த குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்குள்ள அறைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 இளம் பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர்.
4 பேர் கைது
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வீட்டின் உரிமையாளர் நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 49) மற்றும் சாரத்தை சேர்ந்த விஷாலிதேவி (36), தவளக்குப்பத்தை சேர்ந்த வினோத்குமார் (27), சிவக்குமார் (38) என்பதும், விஷாலிதேவி புரோக்கராக செயல்பட்டு அழகியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், வினோத்குமார், சிவக்குமார் ஆகியோர் வாடிக்கையாளர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து செல்வம், விஷாலிதேவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள், 5 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் கைப்பற்றினர். மீட்கப்பட்ட அழகி காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.