கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 4 பேர் கைது
|மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
காரைக்கால் நிரவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் அருகே சிலர் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு கஞ்சா விற்ற 4 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
4 பேர் கைது
அவர்களை விரட்டி பிடித்து சோதனைச் செய்தபோது, 4 பேரின் பாக்கெட்டுகளில், சுமார் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுனாமி குடியிருப்பைச்சேர்ந்த ஸ்டீபன்ரான் (வயது30), மதன்ராஜ் (28), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச்சேர்ந்த சக்திவேல் (28) மற்றும் காரைக்கால் மதகடியைச்சேர்ந்த 17 வயது சிறுவன் ஆவர். அவர்களிமிடருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.