லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
|புதுவையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநள்ளாறு
திருநள்ளாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சுரக்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், சுரக்குடி சித்ரா காலனியை சேர்ந்த குமார் (வயது 48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ரூ.130 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பேட்டை சாராயக்கடை எதிரில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன் (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது ரபீக் (52), புதுவை சின்னையாபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்ற மகேஷ் (31) ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.