காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகள் சிறைப்பிடிப்பு
|எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகளை புதுவை மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
புதுச்சேரி
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகளை புதுவை மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
காரைக்கால் மீனவர்கள்
புதுச்சேரி மாநிலம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களாக பிரிந்து உள்ளன. இந்த 4 பிராந்தியங்களிலும் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 விசைப்படகுகளில் இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதாகவும், அதிவேக என்ஜீனை உபயோகிப்பதாகவும், புதுவை மற்றும் மரக்காணம் பகுதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிகிறது.
4 விசைப்படகு சிறைப்பிடிப்பு
இதனை அறிந்தவுடன் புதுச்சேரி மற்றும் மரக்காணம் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் காரைக்கால் மீனவர்களின் 4 விசைப்படகுகளை சிறைபிடித்து புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். புதுச்சேரி, காரைக்கால் ஒரே மாநிலம் என்றாலும், மீன்பிடில்லையை தங்களுக்குள் வகுத்து மீன்பிடித்து வருகின்றனர்.
காரைக்கால் மீனவர்கள் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்களும் தங்களுக்குள் பேசி சமாதானம் செய்துகொள்வதாக தெரிவித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மீனவ பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
----
Reporter : U.MANIKANDAN_Staff Reporter Location : Puducherry - Puducherry