< Back
புதுச்சேரி
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
புதுச்சேரி

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
2 July 2023 10:24 PM IST

திருக்கனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

திருக்கனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பம் வீடூர் வாய்க்காங்கரை பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள், தமிழகப் பகுதியான வானூர் அருகே உள்ள எறையூரைச் சேர்ந்த முருகன் (வயது 23), மதிவாணன் (38), மயிலம் அண்ணாநகரைச் சேர்ந்த சக்தி முருகன் (22), மாரிமுத்து (24) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பாக்கெட் கஞ்சா பொட்டலங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்