< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
|30 Sept 2022 10:12 PM IST
வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே பொறையூர் 4 முனை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்ற யோகரத்தினம் (வயது 19), சீனு என்ற சிவராஜன் (19), ராதாகிருஷ்ணன் (19), மூலக்கடை பகுதியை சேர்ந்த மேகநாதன் (19) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.