< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
|13 March 2023 9:15 PM IST
புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள இடுகாட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்றனர்.
ஆனால் அவர்களை போலீசார் மடக்கிபிடித்தனர். விசாரணையில் அவர்கள் வாணரப்பேட்டையை சேர்ந்த திலீப் (32), முகமது ஷரீப் (38), வம்பாகீரப்பாளையம் சதீஷ் (33), குமரகுருபள்ளம் மனோகர் (47) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 400 ரொக்கப்பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.