< Back
புதுச்சேரி

புதுச்சேரி
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

25 Sept 2023 11:11 PM IST
கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம்
கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் கடற்கரை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டக்குப்பம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த ஸ்ரீராம், வீரமணி, சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த செந்தில், லாஸ்பேட்டை குமரன் நகரை சேர்ந்த நிர்மல்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,120 ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.