< Back
புதுச்சேரி
புதுச்சேரி
30 பெண் தொழிலாளர்களை குளவி கொட்டியது
|10 July 2023 10:33 PM IST
திருக்கனூர் அருகே 100 நாள் வேலையில் ஈடுபட்ட 30 பெண் தொழிலாளர்களை குளவி கொட்டியது.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பழைய ஏரியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மரத்தில் இருந்த கூட்டில் இருந்து கிளம்பிய குளவிகள், அங்கு வேலை செய்த பெண் தொழிலாளர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பலர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள், குளவி கொட்டியவர்களை மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.