< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
புதுச்சேரி

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
12 Oct 2023 8:19 PM IST

புதுவை சாரத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் சாரம் வெங்கடேஸ்வரா நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோரிமேடு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் சுதானா நகரை சேர்ந்த மாதேஷ் (வயது 19), லாஸ்பேட்டையை சேர்ந்த தயாநிதி (19), தனுஷ் (19) என்பதும், அவர்கள் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்