< Back
புதுச்சேரி
கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேர் கைது
புதுச்சேரி

கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
1 Oct 2023 10:13 PM IST

புதுவை மேட்டுப்பாளையத்தில் கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை பூமியான்பேட்டை லம்பார்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). கொத்தனார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் சாராயக்கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக பூமியான்பேட்டையை சேர்ந்த தாஸ் (38), பெருமாள் (30), பிரகாஷ் (37) ஆகியோர் ராஜேசை கத்தியால் வெட்டிக் கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்