< Back
புதுச்சேரி
வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேருக்கு வலைவீச்சு
புதுச்சேரி

வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
5 Nov 2022 10:07 PM IST

போட்டோ எடுக்கும்போது குறுக்கே சென்றதால் வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

புதுச்சேரி

புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன், இவரது மகன் ரத்தீஷ் (வயது 18). இவர் ரெயின்போ நகரை சேர்ந்த தனது நண்பரான அபிஷேக் என்பவருடன் கடற்கரைக்கு சென்றார். அவர்கள் பழைய சாராய ஆலை அருகே நடந்து சென்றபோது திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரினோ, ரஞ்சித் உள்பட சிலர் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது குறுக்கே வந்துவிட்டதாக ரத்தீசிடம் தகராறு செய்தனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ரத்தீஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த முன்விரோதம் காரணமாக கோவிந்தசாலையை சேர்ந்த ரஞ்சித், பாண்டியன், வினோத் ஆகியோர், வீட்டின் அருகில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த ரத்தீஷிடம் தகராறு செய்து, கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் தலையில் காயமடைந்த ரத்தீஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் ரஞ்சித், பாண்டியன், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்