< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
|19 Sept 2023 11:44 PM IST
காரைக்கால் பகுதியில் பணம் வதை்து சூதாடிய 3 பேரை போலீசார் கைத செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் பறவைபேட் குப்பை கிடங்கு பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அவர்களை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் காரைக்கால் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பழனிவேல் (வயது54), பி.கே சாலையை சேர்ந்த ரவிக்குமார் (52), முருகராமு நகரை சேர்ந்த லூர்துராஜ் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.2,500 ரொக்கம், 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.