< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
புதுச்சேரி

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
21 July 2022 9:51 PM IST

காரைக்காலில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு எட்டுகுளம் அருகே விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த ராம்குமார் (வயது 22), காரைக்கால் மேட்டை சேர்ந்த தினகரன் (20) மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்