< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா விற்ற 3 பேர் கைது
|13 Jun 2023 11:20 PM IST
காரைக்காலில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த கருக்களாச்சேரியில் கருவாடு காய வைக்கும் தளத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக நிரவி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், காரைக்கால் கீரைத்தோட்டம், ஒப்பிலாமணியார் பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 24), காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்த கவாஸ்கர் என்ற கவிமணி (23), வள்ளலார் நகரை சேர்ந்த சிராஜுதீன் (23) என்பதும், சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.