< Back
புதுச்சேரி
ஒரே நாளில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுச்சேரி

ஒரே நாளில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

தினத்தந்தி
|
23 July 2023 11:37 PM IST

புதுவையில் ஒரே நாளில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

ஒரே நாளில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர் புதுவை லல்லி தொலாந்தான் வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, புதுவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இது குறித்து ஆகாஷ் அளித்த புகாரின்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் திருடர்களை அடையாளம் காணும் விதமாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வெளியான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில்...

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மர்ம நபர்கள் உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதிகளில் அதேநாளில் மேலும் 2 மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரின் புகைப்படம் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சிகளை சமூக வலைதளத்தில் போலீசார் வெளியிட்டு, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்