2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
|காரைக்காலை சேர்ந்த 2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால்
காரைக்காலை சேர்ந்த 2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை
வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆணைப்படி காரைக்கால் மாவட்டத்தில் 2022-23-ல் நவரை பருவ நெல், உளுந்து, எள் மற்றும் கோடைப்பருவ பருத்தி மற்றும் கரும்பு சாகுபடி செய்த பொதுப்பிரிவு விவசாயிகள் 2 ஆயிரத்து 369 பேருக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.2 கோடியே 73 லட்சத்து 61 ஆயிரத்து 230 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேற்கண்ட பருவத்தில் நெல், உளுந்து, எள் மற்றும் பருத்தி சாகுபடி செய்த அட்டவணை பிரிவு விவசாயிகள் 348 பேருக்கு பயிர் உற்பத்தி தொகையாக ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 450 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.