வருமானவரி அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை
|தவளக்குப்பம் அருகே தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அருகே தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.
கம்ப்யூட்டர் நிறுவனம்
புதுச்சேரி மாநிலத்தில் புதுவை-கடலூர் பைபாஸ் சாலையில் தனியார் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்துக்கு சொந்தமான கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள கிளை நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி நேற்று வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபால் புதுவையில் உள்ள அந்நிறுவனத்திலும் சென்னையை சேர்ந்த வருமானவரி அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காரில் வந்து சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.
2-வது நாளாக சோதனை
இன்று 2-வது நாளாகவும் இந்த சோதனை நடந்தது. வருமானவரி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து நுழைவுவாயில் மூடப்பட்டது. இச்சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
சோதனையையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.