< Back
புதுச்சேரி
புதுச்சேரி
26-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
|21 July 2023 10:02 PM IST
புதுவை லாஸ்பேட்டை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 26-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
லாஸ்பேட்டை
புதுவை பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு சாந்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி 26-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் பகல் 2 மணி வரையில் சாந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.