25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
|புதுவையில் அதிக மாணவர்களை ஏற்றிச்சென்ற 25 ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 8 மாணவிகள் படுகாயமடைந்தனர். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர். 5 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறையும், போக்குவரத்து போலீசாரும் எச்சரித்தனர்.
இதை கண்காணிக்கும் வகையில் நகர பகுதியில் போக்குவரத்து போலீசார் இன்று முன்தினம் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களை சோதனை செய்தனர். இந்தநிலையில் 2-வது நாளாக புதுவை துய்மா வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே இன்று மாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் கலியபெருமாள், பிரபாகர ராவ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது 5 மாணவர்களுக்கு மேல் ஏற்றிச்சென்ற 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.