< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
|18 Aug 2023 9:34 PM IST
மூலக்குளம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
புதுவை மேரி உழவர்கரை ஜான்குமார்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கு நின்ற 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த அரவிந்த் (வயது 25), மேரி உழவர்கரை சக்தி நகர் தினேஷ் (21) என்பதும், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 1,120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.