பேக்கரி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது
|புதுவையில் மீண்டும் பேக்கரி கடை சூறையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
புதுவையில் மீண்டும் பேக்கரி கடை சூறையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேக்கரி கடை
புதுவை எல்லைப்பிள்ளைசாவடி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள ஓம் முருகா பேக்கரி என்ற கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை அவர் பணியில் இருந்தபோது, உருளையன்பேட்டை குயவர்பாளையத்தை சேர்ந்த டி.ஆர்.நகரை சேர்ந்த நாகராஜ் (23) என்பவர் கடைக்கு வந்து திண்பண்டங்களை வாங்கியுள்ளார். இதற்காக ரூ.130-ம் கொடுத்து சென்றுள்ளார்.
கண்ணாடியை உடைத்து சூறை
இந்தநிலையில் சிறிதுநேரம் கழித்து நாகராஜ், தனது நண்பரான லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த அருள்பிரகாஷ் (24) என்பவருடன் கடைக்கு வந்துள்ளார். அப்போது, அருள்பிரகாஷ் எப்படி என் நண்பரிடம் பணம் வாங்கலாம்? என்று கூறி கண்ணாடி கதவினை உடைத்து பிரிட்ஜையும் சேதப்படுத்தி சூறையாடியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ், அருள்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுவையில் சமீப காலமாக பேக்கரிகளை சூறையாடி பணம் கேட்டு மிரட்டுவது தொடர் கதையாகி உள்ளது. இதை போக்கிட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க் கின்றனர்.