< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுச்சேரி

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 Oct 2023 7:14 PM IST

தட்டாஞ்சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் அருகே 2 பேர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்ற 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 35), பாலாஜி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்