கொத்தனார் உள்பட 2 பேரை சாராய பாட்டிலால் தாக்குதல்
|திருவேட்டக்குடியில் முன் விரோதம் காரணமாக கொத்தனார் உள்பட 2 பேரை சாராய பாட்டிலால் குத்திய சித்தாளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோட்டுச்சேரி
திருவேட்டக்குடியில் முன் விரோதம் காரணமாக கொத்தனார் உள்பட 2 பேரை சாராய பாட்டிலால் குத்திய சித்தாளை போலீசார் தேடி வருகின்றனர்.
கொத்தனாருடன் முன்விரோதம்
திருவேட்டக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 24), கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரிடம் சித்தாளாக வேலை பார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த சிவ சங்கரலிங்கத்துடன் (26) முன் விரோதம் இருந்துள்ளது.
வேலை முடிந்து இன்று செல்வமணி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை, சிவ சங்கரலிங்கம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
சாராய பாட்டிலால் குத்து
அப்போது தகராறு முற்றவே, சாலையோரம் கிடந்த காலி சாராய பாட்டிலை எடுத்து செல்வமணியின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். அதைப்பார்த்து ஓடி வந்து தடுக்க முயன்ற ராம்கி (24) என்பவரையும் சாராய பாட்டிலை உடைத்து கழுத்தில் சொருகியுள்ளார். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றார்.
படுகாயமுற்ற செல்வமணி, ராம்கி இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.