< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கத்தியுடன் சுற்றிய 2 பேர் கைது
|14 Sept 2023 11:12 PM IST
கோட்டுச்சேரி அருகே வழிப்பறி செய்ய கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலீசார் காந்தி சாலை வடம் போக்கி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அவர்கள் நாகை மாவட்டம் மேல்பட்டினச்சேரி அமிர்தா நகரைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 24), சந்தோஷ்குமார் (20) என்பதும், வழிப்பறி செய்ய கத்தியுடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கத்தியையும் பறிமுதல் செய்தனர்.