< Back
புதுச்சேரி
லாட்டரி விற்ற 2 பேர் கைது
புதுச்சேரி

லாட்டரி விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
14 Sept 2023 10:58 PM IST

காரைக்கால் பஸ் நிலையத்தில் 3 நம்பர் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்ரி விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் 2 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் காரைக்கால் லெமேர் வீதி, கணபதி நகரைச் சேர்ந்த முகம்மது யூசுப் (வயது 43), கோட்டுச்சேரி முக்குலத்தோர் வீதியைச் சேர்ந்த செல்வம் (59) என்பதும் ஆன்லைன் மூலம் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், ரூ.2 ஆயிரத்து 800, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்