< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
|8 Sept 2023 10:27 PM IST
புதுவையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நல்லவாடு, ஆண்டியார்பாளையம், தானம்பாளையம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நல்லவாடு பகுதியில் புதுநகரை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 22), ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (26) ஆகியோரின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது கடைகளில் இருந்து 1 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.