< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
|28 July 2023 10:13 PM IST
அரியாங்குப்பம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் தவளக்குப்பம்-நல்லவாடு செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோட்டக்குப்பம் முல்லா வீதியை சேர்ந்த முகமது சபுன் (வயது 40), வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (47) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பண்டல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.