< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
|11 July 2023 11:20 PM IST
அரியாங்குப்பத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோடு வள்ளலார் கோவில் எதிரே உள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிசாமி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் அருள் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து, 25 பண்டல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நோணாங்குப்பம் தாமரைக் குளம் வீதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக உரிமையாளர் ராஜேஷ் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.