< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
|3 Sept 2023 10:08 PM IST
அரியாங்குப்பம் அருகே ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் கோட்டைமேடு சிக்னல் சந்திப்பில் ஒருவர் பொதுமக்களிடம் தர குறைவாகவும் கத்தியை காட்டி மிரட்டியும் ரகளையில் ஈடுபடுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் வீரராஜ் மற்றும் சக்திமுருகன் ஆகியோர் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த முத்து என்கிற முருகன் (வயது 37) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் சிக்னல் சந்திப்பில் ரகளையில் ஈடுபட்ட தவளக்குப்பம் அடுத்த மேரி வீதியை சேர்ந்த யுவராஜ் (44) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.