< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
|8 Jun 2023 10:41 PM IST
தவளக்குப்பத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர் பகுதியில் உள்ள புதிய பெட்ரோல் பங்க் பின்புறத்தில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கடலூர் மாவட்டம் எஸ்.எம்.சாவடியை சேர்ந்த சந்தோஷ் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் கஞ்சா விற்பதற்காக அங்கு நின்று இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.38 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள், 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.