< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
|29 May 2023 11:00 PM IST
முத்தியால்பேட்டை போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை
முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சோலைநகர் பாப்பம்மாள் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, அவர்களை சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிதென்னல் சத்தியா நகரை சேர்ந்த பெயிண்டர் ஆனந்த் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.