< Back
புதுச்சேரி

புதுச்சேரி
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

21 July 2023 10:29 PM IST
புதுவையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு
புதுவை பெரிய காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காலாப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அனிஷ் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.