< Back
புதுச்சேரி
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 Aug 2022 11:32 PM IST

புதுச்சோியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரையும் போலீசார் கைது செய்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று மாலை மறைமலை அடிகள் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பண்ருட்டியை சேர்ந்த வல்லரசு (வயது 22), சுபாஷ் (22) என்பதும், இவர்கள் 2 பேரும் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வண்டி என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்