< Back
புதுச்சேரி
திறந்த வெளியில் மது குடித்த 2 பேர் கைது
புதுச்சேரி

திறந்த வெளியில் மது குடித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
14 July 2023 9:27 PM IST

கோட்டுச்சேரி அருகே திறந்த வெளியில் மது குடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி போலீசார் கீழ்வெளி வாட்டர் டேங்க் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாட்டர் டேங்க் அருகில் ஒருவர் திறந்த வெளியில் மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டனர். அவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியைச் சேர்ந்த கவியரசன் (வயது 37) ஆவார்.

இதுபோல நெடுங்காடு போலீசார் மேலக்காசாக்குடி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பஸ் நிறுத்தப் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்தனர். கைதான அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தென்பிடகையைச் சேர்ந்த கோபு (32) ஆவார்.

மேலும் செய்திகள்